பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வீட்டில் தீ - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வீட்டில் தீ

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு சொந்தமான வீடொன்றில் தீ பரவியுள்ளது.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள குறித்த வீட்டில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தீ பரவியதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு சொந்தமான குறித்த வீட்டின் இரண்டாம் மாடியிலுள்ள அறையொன்றில் தீ பரவியதாக பொலிஸ் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கறுவாத் தோட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment