நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 18ம் திகதி எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு ஈவா வனசுந்தர மற்றும் எல்.டீ.பீ தெஹிதெனிய ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பான காணொளியை நீதிபதி பரிசீலனை செய்ததாக நீதிபதிக்கு பதிலாக முன்னிலையாகிய அரச மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் பிரியந்த நாவான தெரிவித்துள்ளார்.
அந்த காணொளியை பார்த்ததுமே பிரதி அமைச்சர் நீதிமன்றைத்தை அவமானப்படுத்தும் விதமாக பேசுவது தெளிவாக தெரிவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
குறித்த மனுவை மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மனுவில் கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஞ்சன், இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment