எதுவித முன் அறிவித்தலுமின்றி கடமைக்கு சமூகமளிக்காத காத்தான்குடி நகர சபையின் 73 சுகாதார சுத்திகரிப்பு ஊழியர்கள் வேலையிலிருந்து இடை நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

எதுவித முன் அறிவித்தலுமின்றி கடமைக்கு சமூகமளிக்காத காத்தான்குடி நகர சபையின் 73 சுகாதார சுத்திகரிப்பு ஊழியர்கள் வேலையிலிருந்து இடை நிறுத்தம்

காத்தான்குடி நகர சபையின் 73 சுகாதார சுத்திகரிப்பு ஊழியர்கள் எதுவித முன் அறிவித்தலுமின்றி கடமைக்கு சமூகமளிக்காததால் அவர்களை வேலையிலிருந்து இடை நிறுத்தவுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸபர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸபர் நோன்பு பெருநாள் தினமான 16.6.2018 அன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய காத்தான்குடி நகர சபையின் சுகாதார சுத்திகரிப்பு ஊழியர்கள் 73 பேர் எந்த வித முன் அறிவித்தலுமின்றி கடமைக்கு சமூகமளிக்க வில்லை.

அன்றைய தினம் கட்டமாயமாக இந்த ஊழியர்கள் சமூகமளித்திருக்க வேண்டும். ஆனால் எந்த வித முன் அறிவித்தலுமின்றி இவர்கள் கடமைக்கு சமூகமளிக்க வில்லை.

இதனால் இந்த 73 ஊழியர்களையும் வேலையிலிருந்து இடை நிறுத்துவதென தீர்மானித்துள்ளேன். இவர்களில் தற்காலிக ஊழியர்களும் நிரந்த ஊழியர்களும் அடங்குகின்றனர்.

அதில் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக வேலையிலிருந்து இடை நிறுத்துவதுடன் நிரந்தர ஊழியர்கள் தொடர்பிலும் முடிவுகள் எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களுக்கான இடை நிறுத்தல் கடிதம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் அவர்களுக்கான கடிதங்கள் அனுப்பப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த ஊழியர்களுக்கு அன்றைய தினத்தில் வேலைக்காக வரவேண்டும் என்று தெரிந்திருந்தும் அறிவித்திருந்தும் அவர்கள் பொறுப்புடன் தமது கடமைக்காக இவர்கள் வரவிலலை இதனாலேயே இந்த தீர்மானத்திற்கு வந்ததாக தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment