ரஜினிகாந்த் நடிப்பில் 400 கோடி மெகாபட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ள்ளது.
இதன் படப்பிடிப்பை 2015 டிசம்பரில் தொடங்கி கடந்த வருடம் முடித்தனர், அதன்பிறகு டப்பிங், கிராபிக்ஸ், ரீரெக்கோர்டிங் போன்ற தொழில்நுட்ப பணிகள் நடந்தன. வெளிநாட்டு ஸ்டூடியோக்களில் கிராபிக்சை ஹொலிவுட் படங்களுக்கு இணையாக செய்துள்ளனர்.
இந்திய அளவில் கிராபிக்ஸ் மிரட்டலில் அதிகம் பேசப்பட்ட படம் பாகுபலி. அதை மிஞ்சும் அளவுக்கு 2.0 இருக்கும் என்கின்றனர். இதன் பாடல்களை சில மாதங்களுக்கு முன்பு டுபாயில் ஆடம்பர விழா நடத்தி வெளியிட்டனர்.
2.0 படமான வீடியோக்களையும் இயக்குனர் ஷங்கர் அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
படத்தின் சில நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை வெளியிட்டது யார் என்று விசாரித்து கண்டுபிடித்து உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இரு மாதங்களுக்கு முன்பே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்து வெளிநாட்டு நிறுவனங்கள் கிராபிக்ஸ் வேலைகளை முடிப்பதில் தாமதம் செய்ததால் தள்ளிவைத்தனர்.
அதற்கு பதிலாக ரஜினியின் இன்னொரு படமான காலாவை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். முதலில் இந்த படத்தை 2.0-க்கு பிறகுதான் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.
தீபாவளிக்கு 2.0 தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் விஜய், அஜித்குமார் படங்களும் தீபாவளியை குறிவைப்பதால் அதற்கு முன்பே 2.0 வெளிவரும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்த 2.0 படத்தின் டிரெய்லர் தயாராகி உள்ளது. மும்பை வாங்கடே மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை அணி மோதும்போது டிரெய்லரை வெளியிடலாமா? என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment