தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (24) காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்திய அரசின் செயற்பாடுகளை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.
இதேவேளை குறித்த செயற்திட்டத்தின் காரணமாக இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து இலங்கை அரசும் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.
யது பாஸ்கரன்
No comments:
Post a Comment