இந்தியாவின் தமிழ்நாடு, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் (22) நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகியதோடு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அங்கு நடந்த கலவரத்தில் காவல்துறையினர் தங்களில் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திவிட்டதாகவும், அவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதாகவும், தமிழகம் உட்பட வெளி மாநில அரசியல் தலைவர்கள் பலர் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக நாளை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment