நிட்டம்பு, ஹக்வடுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று (24) பிற்பகல் நிட்டம்புவ, ஹக்வடுன்ன பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய், மகன் மீது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப்பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, கவலைக்கிடமான நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மரணமடைந்தவர், துமுன்னேகெதர, கல்எலிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான வினீதா பத்மினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த 26 வயதான அவரது மகன், வதுபிட்டிவல வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment