சீனாவில் 30 தளங்களைக் கொண்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் பதினைந்தே நொடிகளில் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
யான்டாய் என்ற இடத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு 30 தளங்களைக் கொண்ட 4 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
தென் கொரியாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் கட்டிய இந்தக் கட்டடங்கள் உலகளாவிய பொருளாதார தேக்கத்தினால் இரண்டு ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து இந்தக் கட்டடங்களை இடிக்க யான்டாய் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அந்தக் கட்டடங்களில் வெடி மருந்துகள் வைக்கப்பட்டு ஒரே நேரத்தில் வெடிக்க வைக்கப்பட்டன. பதினைந்தே நொடிகளுக்குள் பிரமாண்டமான 4 கட்டடங்களும் புழுதியைக் கிளப்பியபடி தரைமட்டமாயின.
No comments:
Post a Comment