லிபியாவில் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்த அந்நாட்டின் இரு போட்டி அரசுகளுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சந்தித்த நான்கு குழுக்களும் வரும் செப்டெம்பர் நடுப்பகுதியில் அவசியமான சட்டங்களை வகுப்பதற்கும் இணங்கியுள்ளன.
நல்லிணக்கத்தை நோக்கிய அவசிய நடவடிக்கை என்று இதனை பாராட்டி இருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், இதனை ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் வர்ணித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு முஅம்மர் கடாபி கொல்லப்பட்டு அவரது அரசு கவிழ்க்கப்பட்டது தொடக்கம் லிபியா சட்ட ஒழுங்கற்ற நாடாக இருந்து வருகிறது. வட ஆபிரிக்காவைச் சேர்ந்த இந்த நாட்டை தற்போது போட்டி ஆயுதக் குழுக்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் பாரிஸில் இடம்பெற்ற மாநாட்டில் கிழக்கை தளமாகக் கொண்ட தளபதி கலீபா ஹப்தர், திரிபோலி பிரதமர் பயெஸ் செராஜ், போட்டி பாராளுமன்ற தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
No comments:
Post a Comment