போர்டோ ரிகோவை கடந்த செப்டெம்பர் மாதம் தாக்கிய மரியா புயலில் 4,600க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை விடவும் 70 மடங்காகும்.
மின்சார வெட்டு மூலம் மருத்துவ வசதிகள் தடைப்பட்டது மற்றும் வீதி இணைப்புகள் துண்டிக்கப்பட்ட காரணத்தினால் இந்த புயலில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்பு நேர்ந்ததாக ஆய்வு கூறுகிறது.
தாம் அறிவித்ததை விடவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் என்று எப்போதும் நம்பியதாக போர்டோ ரிகோ அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த புயலில் 64 பேரே உயிரிழந்ததாக உத்தியோகபூர்வ எண்ணிக்கை கூறுகிறது.
புயலால் பரந்த அளவில் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை கணிப்பது கடினமாக இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஹார்வார்ட் கணக்கெடுப்பை அந்நாட்டு அரசு வரவேற்றுள்ளது.
மரியா புயல் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய மின் வெட்டுக்கு காரணமாக அமைந்ததோடு இன்றும் போர்டோ ரிகோ தீவு தொடர்ந்து மின் துண்டிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment