காத்தான்குடி நகர சபைக்கு SLFP கட்சியிலிருந்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

காத்தான்குடி நகர சபைக்கு SLFP கட்சியிலிருந்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்

காத்தான்குடி நகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெற்றி பெற்ற பத்து உறுப்பினர்களும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் முன்னிலையில் இன்று 1.4.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்த சத்தியப்பிரமாணம் செய்யும் வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.வை.சலீம், காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிரீதர் உட்பட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி நகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற பத்து உறுப்பினர்களும் அதே போன்று வாகரை பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெற்றி ஒரு உறுப்பினருமாக 11 உறுப்பினர்கள் உறுதியுரையை வாசித்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த சத்தியப்பிரமாண வைபவத்தில் காத்தான்குடி நகர சபை தலைவராக எஸ்.எச்.அஸ்பர் மற்றும் பிரதி தவிசாளராக எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோருமம் காத்தான்குடி நகர சபை தவிசாளராகவும் பிரதி தவிசாளராகவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பெருந்திரளான மக்கள் முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment