விருந்துபசாரத்தில் ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் வெட்டு காயங்களுடன் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் சிலாபம் – அம்கதவில – கோச்சிவத்த பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
அம்கதவில பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தின் இரண்டு சகோதரர்களும், மேலும் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோதல் இடம்பெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள துப்பாக்கி மற்றும் வாளையும் பிரதேசவாசிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment