எதிரிகள் நாட்டு ஏவுகணைகளை தடுத்து, தாக்கி அழிக்கும் அதிநவீன தடுப்பு ஏவுகணையை கஜகஸ்தான் பகுதியில் ரஷியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாகவும், அவற்றை மிஞ்சும் வகையிலும் ரஷியா தனது ஆயுத பலத்தை தரம் உயர்த்தியும், அதிகரித்தும் வருகிறது. இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட அதிநவீன தடுப்பு ஏவுகணையை வெற்றிகரமாக ரஷியா இன்று பரிசோதித்துள்ளது.
கஜகஸ்தான் பகுதியில் உள்ள சாரி ஷாகான் பகுதியில் உள்ள ஏவுகணை தளத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை திட்டமிட்ட இலக்கை தாக்கி அழித்ததாக ரஷியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment