இந்தியா ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் நுழைவதற்கு பௌத்த சாசன அமைச்சரான காமினி ஜெயவிக்கிரம பெரேராவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
காமினி ஜெயவிக்கிரம பெரேரா இந்து அல்ல என்பதாலேயே அவரை ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காமினி ஜெயவிக்கிரம பெரேரா கடந்த மாதம் இந்தியா சென்றிருந்த போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தான் ஒரு பக்தியுள்ள பௌத்தர் என்று அவர் கூறிய போதிலும், ஆலய நிர்வாகிகள் அவரை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வரில் உள்ள கலிங்க அனைத்துலக நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய காமினி ஜெயவிக்கிரம பெரேரா, தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் குறித்தும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கலிங்க அனைத்துலக நிறுவனத்தின் தலைவரான முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் லலித் மான் சிங், இந்தச் சம்பவத்துக்காக மாநிலத்தின் சார்பில் மன்னிப்புக் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment