இளைஞர், யுவதிகளின் ஒற்றுமையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதனை பிளவுபடுத்தவோ இல்லாமல் செய்யவோ யாருக்கும் இடமளிக்கக்கூடாது. இன ஐக்கியத்தை பாதிக்கும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்யும் வழிகளை இல்லாமலாக்க வேண்டும். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்கும் இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குருணாகல் நிகவரெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற யொவுன்புர நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
யொவுன்புர நிகழ்வுக்கு பல இன,மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் இங்கு குழுமியிருக்கின்றனர். எந்த மதத்தை, இனத்தை சேர்ந்தவர்களானாலும் நீங்கள் அனைவரும் இந்த இடத்துக்கு வந்திருப்பது அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கியப்பட்டு அந்த ஐக்கியத்துடன் மீண்டும் திரும்பிச் செல்வதற்காகும்.
மேலும் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து யொவுன்புர நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் இளைஞர், யுவதிகளுடனான ஒற்றுமையை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனை பிளவுபடுத் தவோ இல்லாமல் ஆக்குவதற்கோ யாருக்கும் இடமளிக்கக்கூடாது.
No comments:
Post a Comment