கிளிநொச்சியில் இளைஞன் மீதான கத்திக்குத்து சம்பவத்துடன், தொடர்புடையதான சந்தேக நபர்களை அடையாளம் காட்டிய போதிலும் பொலிஸார் இதுவரை அவர்களைக் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மிகவும் அசமந்த போக்குடன் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகவும் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனின் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் இந்தச் செயற்பாடுகள் இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்பினர்களை மேலும் ஊக்குவிப்பதாக அமைவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்வசத் திருவிழாவில் வைத்து கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி இரவு ஒன்பது மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், இதுவரை சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்படவில்லை.
குறித்த சந்தேக நபர்களை பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெளிவாக அடையாளம் காட்டிய போதும் அவர்கள் கைது செய்யப்படாதது பொலிஸார் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment