கோப்பு படம்
ஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடா அருகே இன்று அடையாளம் தெரியாத போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அல்-ஹாலி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத போர் விமானங்கள் நடத்திய இரு வான்வழி தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடந்தனர். இந்த தாக்குதலை சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் நடத்தி இருக்கலாம் என நம்பப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
ஹவுத்தி போராளிகள் குழுவின் உள்ளூர் தலைவர் ஒருவரை குறிவைத்தும், இடம்பெயர்ந்த அகதிகள் முகாம் அருகிலும் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் பலியானதாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment