வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சாந்தவேலு ரோகான் என்ற இளைஞன் புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார்.
இந்த விபத்துக்கு அதிகவேகம் அல்லது நித்திரை தூக்கம் காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment