சிங்கள குடியேற்ற அச்சுறுத்தலுக்கு மத்தியிலுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதவ முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் மொத்தமுள்ள 25 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களைப் பெற்றுள்ள அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5 ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 5 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
இந்த நிலையில், சிங்களக் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதைத் தடுக்கும் நோக்கிலும், தமிழரின் பாரம்பரிய நிலப்பகுதியைப் பாதுகாக்கும் நோக்கிலும் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment