மாடியில் இருந்து கீழே வீழ்ந்த இளைஞன் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

மாடியில் இருந்து கீழே வீழ்ந்த இளைஞன் பலி

ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து கீழே வீழ்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் வில்பிரட் நகரை சேர்ந்த 26 வயதுடைய சம்பந்தன் பிரேம்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனியார் வங்கியொன்றில் கடமையாற்றும் குறித்த இளைஞன் கார் ஒன்று வாங்கியமைக்கு நண்பர்களுக்கு கடந்த 26 ஆம் திகதி லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள ஹோட்டலில் விருந்து வழங்கியுள்ளார்.

இதன்போது, மேல் மாடியில் இருந்து கீழே வீழ்ந்த நிலையில் லக்ஷபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment