நம்பிக்கையில்லா பிரேரணை முடிவுகள் இந்த அரசாங்கத்திற்குள் தாக்கத்தை ஏற்படுத்தாது, என முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயலகத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நம்பிக்கையில்லா பிரேரணை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரபட்டது அல்ல பிரதமருக்கு எதிராகவே கொண்டுவரப்பட்டது. ஆகவே இதன் முடிவுகள் என்னவாக இருந்தாலும் அது ஒரு போதும் அரசாங்கத்திற்குள் தாக்கத்தை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து வருட காலங்கள் பூர்த்தியடையும் வரை எவராலும் ஆட்சியை கலைக்க முடியாதென தெரிவித்ததுடன், ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment