பா.உறுப்பினரின் அடையாள அட்டையை காட்டுமாறு கோரிய பொலிஸ் - சிறிது நேரம் நிலவிய பதற்றம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

பா.உறுப்பினரின் அடையாள அட்டையை காட்டுமாறு கோரிய பொலிஸ் - சிறிது நேரம் நிலவிய பதற்றம்

பாராளுமன்ற உறுப்பினரின் அடையாள அட்டையை காட்டுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவரை கேட்டதால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.

கொட்டதெனியாவ - படல்கம - அலுகொல்ல பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாலம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எட்வட் குணசேகர தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.

இதில் திடீரென நுழைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரின் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டபோது இந்த பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment