வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து மின்கலன்களை கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர் அப்பகுதியிழும் அதனை அண்டிய சில பிரதேசங்களுக்கும் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்திகள் உள்ளிட்ட வாகனங்களின் மின்கலன்களை கொள்ளையிட்ட அவற்றை விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அப்பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவித்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் கொள்ளையிடப்பட்ட 20 மின்கலன்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment