முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளார். அந்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மூன்று வாரங்கள் சீனாவில் தங்கியிருப்பார்.
இந்த விஜயமானது தனிப்பட்ட விஜயம் என முன்னாள் பாதுகாப்பு செயளாலரின் பிரத்தியேக செயளாலர் குறிப்பிட்டார். தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை மற்றும் இலங்கையின் எதிர்கால அரசியல் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான நிலமை காணப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசப்படுகின்றது. மறுபுறம் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் சீனா தொடர்பான வீட் அச்சத்தை டில்லி போக்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு தேசிய அரசியல் மற்றும் பிராந்திய அரசியல் குறித்தும் கருத்துக்களை அண்மைக்காலமாக தீவிரமாக வௌிப்படுத்தி வந்த அவர் தற்போது சீனாவிற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். சீனாவில் 3 வார காலம் தங்கியிருக்கும் அவர் அங்கு பலதரப்பினரை சந்திக்கவும் உள்ளார்.
இதேவேளை சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்தில் அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார முகாமைத்துவ கற்கைநெறி ஒன்றைத் தொடர்வதற்காகவே, கோத்தாபய ராஜபக்ச சீனா சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
சீனாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் மூன்றாண்டு அரசியல் கற்கைநெறி ஒன்றைக் கற்பதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.
No comments:
Post a Comment