கம்பஹா மாவட்டத்தில் நாளுக்கு நாள் மாடுகள் களவாடப்பட்டு வருவது அதிகரித்துள்ளதாக கம்பஹா மாவட்ட பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த மாடுகள், இறைச்சிக்காக களவாடப்பட்டு வருவதாகவும் பெரும்பாலும் பசு மாடுகள் மற்றும் பால் கறக்கும் மாடுகளே களவாடப்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக கம்பஹா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி முதித்த புஸ்ஸெல்ல தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, மீரிகம, வெயாங்கொடை, கம்பஹா, அத்தனகல்ல போன்ற பிரதேசங்களிலேயே அதிகளவிலான மாடுகள் களவாடப்பட்டு வருகிறது.
இவற்றிற்கு சொகுசு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறித்த பிரதேசத்திலுள்ள சிலரின் உதவியுடன் இந்த களவு வேலைகளைத் செய்து வருவதாகவும் இதனாலேயே இம்மாட்டுக் களவுகளைப் பிடிக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாட்டுக் களவுகளைக் கட்டுப்படுத்த, மாட்டுப் பண்ணையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவர்களின் ஒத்துழைப்பின்றி பொலிஸாருக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் இக்களவுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால், அதிகளவிலான மாட்டுப்பண்ணைகள் இப்பிரதேசங்களில் மூடப்பட்டுள்ளதாகவும், பண்ணையாளர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, பண்ணையாளர்களினதும் கம்பஹா மாவட்டத்தில் மாடு வளர்ப்போரினதும் நன்மை கருதி, அவர்களின் ஒத்துழைப்புக்களோடு இக்களவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment