அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் பி பிரிவு அங்கத்துவ கழகங்களுக்கிடையே நடாத்திய சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி (25) கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இறுதிப் போட்டியில் மருதமுனை எவரடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை கிறீன்மெக்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி (01-/01) என்ற கோல் சமநிலையில் நிறைவடை ய, பின்னர் நடைபெற்ற தண்டனை உதையில் (04-/03) என்ற கோல் வித்தியாசத்தில் மருதமுனை எவரடி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
இதன்மூலம் மருதமுனை எவரடி விளையாட்டுக்கழகம் ‘ஏ'(A) பிரிவு கழகங்களில் விளையாடுவதற்கான அனுமதியை பெற்றது. புள்ளி அடிப்படையில் நடாத்தப்பட்ட இந்த சுற்றுப் போட்டியில் 17 கழகங்கள் பங்கு பற்றியயிருந்தன. அரை இறுதிப் போட்டியில் மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட கிறீன் மெக்ஸ் அணியினர் (2:1) என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தனர்.
இதேவேளை இதேவேளை மருதமுனை எவரடி விளையாட்டுக்கழகம் அரை இறுதிப் போட்டியில் கல்முனை சண்டோஸ் அணியினரை (2:0) என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அணிக்குரிய வெற்றிக் கிண்ணத்தையும் பணப்பரிசையும் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் யு.எல் றமீஸ் வழங்கி வைத்தார். இதில் சம்மேளனத்தின் உபதலைவர் எம்.எல்.எம்.ஜமால்தீன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment