ஈரானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் - 54 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

ஈரானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் - 54 பேர் காயம்

ஈரான் நாட்டில் நேற்றிரவு அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தினால் 54 பேர் காயமடைந்தனர். ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டது. டெஹ்ரானில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 4.2 என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் ஈரானின் மேற்கு பகுதியில் ரிக்டரில் 5.3 என்ற அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் கூடினர். இதில் சுமார் 54 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் ஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்காணோர் உயிரிழந்ததோடு, ஆயிரக்கணக்காணோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment