மூவின மக்களும் இனநல்லிணக்கத்தையும், இனநல்லுறவையும் கட்டியெழுப்ப வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

மூவின மக்களும் இனநல்லிணக்கத்தையும், இனநல்லுறவையும் கட்டியெழுப்ப வேண்டும்

நாட்டில் வாழும் மூவின மக்களும், அரசியல்வாதிகளும் பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் மறந்து நாம் அனைவரும் ஒருதாயின் பிள்ளைகள் போன்று இனங்களுக்கிடையில் இனநல்லிணக்கத்தையும், இனநல்லுறவையும் கட்டியெழுப்ப வேண்டுமேன கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் சார்பாக தெரிவு செய்யப்பட்ட 36 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு சனிக்கிழமை (31) காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

உலகத்திலே பெண் பிரதமரை நாங்களே உருவாக்கினோம்.இலங்கையின் வரலாற்றில் பிரித்தானியா ஆட்சிக்காலம் முதல் ஜனநாயகம் பேசப்பட்டு வருகின்றது.ஜனநாயகம் மிக்க நாட்டிலே அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்.

இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்திற்கும்,மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் சிறப்பாக சேவைசெய்ய வேண்டும். அதற்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தநாட்டில் வாழும் நாங்கள் இனங்களுக்கோ, சமயங்களுக்கோ பாரபட்சமின்றி அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்.

பயங்கரவாதம், பிரிவினைவாதம் என்பவற்றை மறந்தும்,கடந்தகால கசப்புணர்வுகளையும் மறந்து நாட்டின் எதிர்காலத்திற்கும், சுபீட்சத்துக்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். எமது நாட்டில்மட்டுமல்ல ஜெனிவாவிலும் ஜனநாயகம் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு கருத்துக்கள் முன்மொழியப்பட்டு அதனூடாக அம்மக்களின் முன்னேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

நல்லிணக்கம், இனநல்லுறவு சம்பந்தமாக 120க்கு மேற்பட்ட நாடுகளில் பேச்சுவார்த்தை பேசியுள்ளோம். விடுதலைப்புலிகள் 6க்கு மேற்பட்ட நாட்களில் ஜெனிவாவில் பேசியிருக்கின்றார்கள். பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என்றாலும் அவர்களின் பேச்சுவார்த்தை, தேவைகள் என்பவற்றில் நாட்டில் முன்னேற்றம் நடைபெற்று வருகின்றது.

இதன்பயனாக இனநல்லுறவு, நல்லிணக்கம் கட்டியெழுப்படுகின்றது. ஜனநாயகரீதியான உறவு காரணமாக இனங்களுக்கிடையில் இனநல்லுறவு கட்டியெழுப்ப பட்டுள்ளது. அதனால் பாரபட்சமின்றி மக்களின் தேவைகள், ஒற்றுமை, தனித்துவம் பேணிப்பாதுகாக்கப்படுகின்றது. சமாதானத்தை புரிந்துகொள்ள வேண்டும்.ஒரு சமூகத்தின் தேவைகள், முன்னேற்றங்கள் என்பனவற்றை கல்வித்துறையில் அவதானிக்கலாம்.

நாங்கள் கிழக்குமாகாணத்தை பொறுப்பேற்ற காலம் முதல் இன்றுவரையும் 2000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கிழக்குமக்களையும், பட்டதாரிகளையும் இதயசுத்தியுடன் நேசிக்கின்றார்.

அதனால் இங்குள்ள பொதுப்பிரச்சனைகள், தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பதில் கவனமாக இருக்கின்றார். எதிர்வரும் மேமாதமளவில் 790 பட்டதாரிக்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு தீர்மானித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கு 2018 ஆம் ஆண்டு முடிவுறுவதற்குள் எஞ்சியுள்ள பட்டதாரிகள் முழுவதற்கும் நியமனம் வழங்கப்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பாலபுனரமைப்பு வேலைகள் யாவும் குறுகியகாலத்துக்குள் முடித்துக் கொடுக்கப்படவேண்டும்.

அவ்வாறு முடித்துக்கொடுக்கப்படாத ஒப்பந்தங்கள் யாவும் 2018 நிறைவுபெறாத பட்சத்தில் ஒப்பந்தங்கள் ரத்துச்செய்யப்படும். மட்டக்களப்பு விமானநிலைய வீதி திறக்கப்படவேண்டும்.

மட்டக்களப்பு -வலையிறவு பாலத்திற்கிடையிலான போக்குவரத்துப் பிரச்சனை குறுகியகாலத்திற்குள் பயணிக்கும் வகையில் பாதை புனரமைக்கப்படும். மட்டக்களப்பு நகரில் உள்ள கைவிடப்பட்ட பொதுநூலகம் 200 மில்லியன் நிதியொதுக்கீட்டில் மீள கட்டுவதற்குரிய வேலைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளேன் எனத்தெரிவித்தார்.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment