
அதன்படி ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக என்.டி.பி. வங்கியின் முன்னாள் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாக மனோ தித்தவெல்ல, சுசந்த கட்டுகம்பொல, கலாநிதி ரொஷான் பெரேரா ஆகியோரும் முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜெயம்பதியும் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை சமர்ப்பித்த இராஜினாமா கடிதங்கள் கடந்த மார்ச் 29 ம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து புதிய தலைவரும் பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment