பாகிஸ்தான் நாட்டில் பிரபல கவ்வாலி பாடகர் அம்ஜத் சப்ரி படுகொலைக்கு காரணமானவர்கள் உள்பட 10 பயங்கரவாதிகளின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி ராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் மிகப்பிரபலமான கவ்வாலி பாடகர் அம்ஜத் சப்ரி என்பவரை கடந்த 22-6-2016 அன்று கராச்சி நகரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதுதவிர, பெஷாவர் நகரில் உள்ள பியர்ல் கான்ட்டினென்ட்டல் ஓட்டலின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாகுதல், ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்பட மொத்தம் 62 உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான வெவ்வேறு வழக்குகள் தொடர்பான பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டில் நடைபெற்று வந்தன.
பாடகர் அம்ஜத் சப்ரி
கடந்த 16-12-2014 அன்று பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்துக்கு பின்னர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து, தண்டிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ரகசிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ கோர்ட்டில் நடைபெற்று வந்த சில வழக்குகளில் வாதப் பிரதிவாதம் முடிவைந்த நிலையில் மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் ராணுவ தளபதி காமெர் ஜாவெத் பாஜ்வா இன்று உத்தரவிட்டுள்ளார். இதுதவிர மேலும் 5 பயங்கரவாதிகளுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைகளுaக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment