நாவலப்பிட்டி - தலவாக்கலை பிரதான வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று மாலை (02) கெட்டபுலா சந்தியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியில் தீடீரென தீப்பிடித்த நிலையில் ஓட்டுனரும், பயணித்த மற்றொரு நபரும் முச்சக்கர வண்டியை விட்டு தப்பியோடியமையால் அவர்கள் இருவரும் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்த் தப்பியுள்ளனர்.
பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தும் சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான முச்க்கர வண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment