இச்சந்திப்பில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம். மன்சூர், அலிசாஹிர் மௌலானா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், தவம், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், முஸ்லிம்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், அம்பாறையிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அம்பாறை ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை நகருக்கு விஜயம் செய்ய வேண்டுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் (28) புதன்கிழமை காலை பிரதமரை சந்தித்து பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள்விடுத்ததோடு குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பிலும் கலந்துரையாடினார். இதன்போது பிரதமரின் கள விஜயம் தொடர்பான மேற்குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment