நல்லாட்சியில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுகின்றது. அரச அலுவலகங்களில் நேர்முகத் தேர்வுகளுக்கு தமிழர்கள் சென்று வந்தாலும் அவர்களை நியமிக்காது தெற்கைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகின்ற நிலை இன்றும் உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
வட மாகாண தென்னைப் பயிர்ச் செய்கை அலுவலகத்துக்கு இந்த ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாண தென்னைப் பயிர்ச் செய்கை அலுவலகங்களுக்கு அலுவலக உதவியாளர், சாரதி, மேற்பார்வையாளர் போன்ற ஆளணிகளுக்கு கொழும்பில் உள்ள தலைமையகத்தினால் கடந்த வருட இறுதியில் நேர்முகத் தெரிவுகள் இடம்பெற்ற போது வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் அந்த நேர்முகத் தேர்வுக்கு தோற்றியிருந்தனர்.
இந்த நேர்முகத் தெரிவின் மூலம் நியமிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் சிங்கள மொழி பேசுபவர்களே. வவுனியா மாவட்ட சபை அலுவலகத்துக்கு 4 பேரும், யாழ்ப்பாணத்துக்கு ஒருவரும், பளைப் பிரதேசத்துக்கு 6 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மொழிபேசும் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் அலுவலக உதவியாளர்களாகக்கூட வட மாகாணத்தைச் சேர்ந்த எவரும் நியமிக்கப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் இருந்து நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் பயனில்லாத நிலையே இன்று உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரி விக்கின்றனர்.
No comments:
Post a Comment