கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது. அங்கு ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அங்கு வருகைதந்திருந்த பௌத்த பிக்குகளின் செயற்பாடு அங்கிருந்தவர்களை சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளது.
குறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் நாட்டின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியபோது பௌத்த மதகுரு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் சகிதம் கலந்து கொண்ட பிக்கு, இவர்கள் இருவர் மாத்திரம் மரியாதை கொடுக்காமல் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். இச் செயற்பாட்டை பார்த்த பலருக்கு சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளதுடன் அவர்களுக்குள்ளே முணுமுணுத்தவாறு இருந்தனர்.
தேசிய கீதம் என்பது ஒரு நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக காணப்படுகின்து. இதற்கு மதிப்பனிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும். ஆனால் இந்த நாட்டில் பௌத்த பிக்குகள் இதனை கடைப்பிடிப்பதில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போதும் இந்த நிலைமை இடம்பெற்றது.
No comments:
Post a Comment