இலங்கையின் தொழிற்சட்டங்களை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவைகளைக் கருத்திற்கொண்டு சட்டதிட்டங்களை திருத்த உள்ளதாக தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்கீழ், பிரசவ கூட கட்டளைச் சட்டம், சாப்பு மற்றும் அலுவலக ஊழியர் சட்டம், தொழிலாளர் இழப்பீட்டுக்கட்டளைச் சட்டம், சம்பள கட்டுப்பாட்டுச் சபை கட்டளைச் சட்டம், ஊழியர் சேமலாப நிதிய சட்ட திட்டங்கள் திருத்தியமைக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment