சம்மாந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சித்திக் ரவல்ஸ் தனியார் பஸ் வண்டி மீது அம்பாரை பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று இரவு 10.30 மணியளவில் உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், பஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பஸ்சை நிறுத்தியபோதும் அப்பகுதியில் யாரும் இல்லாத நிலையில் பஸ் சாரதி உஹன பொலிஸ் நிலையத்திற்கு பஸ்சை எடுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலிஸார் மேற்கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலிஸார் மேற்கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
முஹம்மது இஸ்ஹான்
No comments:
Post a Comment