பாடசாலைகள் மட்ட சிறுவர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் நாளை கண்டியில் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

பாடசாலைகள் மட்ட சிறுவர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் நாளை கண்டியில் ஆரம்பம்

கல்வியமைச்சின் விளை­யாட்­டுத்­துறைப் பிரிவு மூன்­றா­வது முறையாக நடத்தும் அகில இலங்கை பாட­சா­லைகள் மட்ட சிறுவர் மெய்­வல்­லுநர் போட்­டிகள் நாளை கண்டி போகம்­பரை விளையாட்ட­ரங்­கில் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. பாட­சாலை மாணவர்களுக்­கி­டையில் ஆரோக்­கி­ய­மான வீரர்­களை உருவாக்குவதே இந்த சிறுவர் மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்டிகளின் முக்­கிய குறிக்­கோ­ளாக கரு­தப்­பட்டு வரு­கி­றது.

அந்­த ­வ­கையில் மூன்­றா­வது முறை­யாக நடத்­தப்­படும் இந்த சம்பியன்ஷிப் தொடரில் மூன்­றா­வது மற்றும் நான்­காவது தர மாணவ­ர்க­ளுக்­கி­டை­யி­லான போட்டி நாளையும் நாளை மறுதினமும் கண்டி போகம்­பரை விளை­யாட்­ட­ரங்கில் நடைபெறவுள­வுள்­ளது. அகில இலங்கை ரீதி­யாக நடத்­தப்­பட்ட முன்னோட்டப் போட்­டி­களில் தேர்ச்­சி­பெற்று வீர, வீராங்­க­னைகள் நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள இறுதிச் சுற்றில் விளை­யா­டு­கின்­றனர்.

இப்போட்­டிகள் அனைத்தும் அணி விளை­யாட்­டுக்­க­ளா­கவே விளையா­டப்­ப­டு­கி­ன்றன. அதே­வேளை போட்டித் தன்­மையை ஊக்கு­விக்­காது பங்­கு­பற்­று­தலை மாத்­தி­ரமே கல்­வித்­துறை அமைச்சு ஊக்­கு­விக்­கி­றது.

காரணம் போட்டித் தன்மை அதி­க­ரி­த்தால் மாண­வர்கள் அதற்­காக தங்­களை வருத்திக் கொள்வர். ஆனால் எமக்குத் தேவை மாணவர்கள் எதிர்­கா­லத்தில் தேசிய அணிக்கு விளையாடச் செல்லும்போது, அவர்களை இந்த வயதிலேயே அதற்கேற்ப உருவாக்குவது மட்டுமே என்று கல்வியமைச்சின் ஆலோசகர் சுனில் ஜயவீர தெரிவித்தார். இந்த விளை­யாட்டுப் போட்­டி­க­ளுக்கு தொடர்ந்து மூன்­றா­வது ஆண்­டா­கவும் நெஸ்லே நிறு­வனம் அனுசரணை வழங்­கு­கின்­றது.

No comments:

Post a Comment