காலஞ்சென்ற ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியை இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அவரது விருப்பத்திற்கமைவாக அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவரது பூத்தவுடல் இன்று பி.ப 1.30 - 3.30 மணி வரை கொழுப்பு 08ல் அமைந்துள்ள ஜயரத்ன இறுதிக்கிரிகய மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் பி.ப. 4 மணிக்கு பொரளை புதிய தகனச்சாலையில் தகனம் செய்யப்படவுள்ளது.
இறுதிக்கிரியை நிகழ்வில் ஐ.நா. பொதுச் செயலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் UNDP சார்பாகவும் ஊனா மெக்காலே அவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் பொருட்டு ஐ.நா. உதவிப் பொதுச் செயலாளர் ஹயோலியாங் சு (Haoliang Xu) பங்குபற்றவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment