தேசிய மீன்பிடித்துறை சார்ந்த சட்ட மூலத்தை இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான அறிவுறுத்தலை கடற்றொழில் நீரியியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சை முறையாக முன்னெடுத்துச் செல்வதே, இந்த தேசிய மீன்பிடி சட்ட மூலத்தின் முக்கிய நோக்கமாகும். இதுவிடயம் தொடர்பான சட்ட மூல பிரேரணையை தயாரிப்பதற்கு நோர்வே அரசாங்கத்தின் பூரண ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த சட்ட மூல ஆக்கத்திற்கென உரிய தரப்பினர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளும் கிடைக்துள்ளன.
No comments:
Post a Comment