வீட்டின் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த பெண்ணொருவரை பலாத்காரம் செய்ய முற்பட்ட தேரர் ஒருவர் கேகாலை காவற்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை, புவக்தெனிய பிரதேச விகாரையை சேர்ந்த தேரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான தேரர் 42 வயதுடைய பெண்ணொருவரையே இவ்வாறு பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் குளியலறையில் குறித்த பெண் நீராடிக்கொண்டிருந்த நிலையில், சந்தேகநபரான தேரர் திடீரென குளியறைக்குள் புகுந்து இந்த குற்றச்செயலை புரிய முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் குறித்த பெண் தேரரிடம் இருந்து தப்பித்து சம்பவம் தொடர்பில் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். அதன்படி, சம்பவம் தொடர்பில் கேகாலை காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கு அமைய விகாரைக்கு சென்ற காவற்துறையினர் குறித்த தேரரை கைது செய்துள்ளதாக கேகாலை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment