நல்லாட்சி என்று சொல்லி நடைபெறும் இந்த ஆட்சியில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவும் இணைந்து செய்யும் அநீதிகளை பார்க்கும் போது மனவேதனையை உண்டு பன்னுகின்றது.
பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கான ஜனவரி மாதம் இடம்பெற்ற போட்டி பரீட்சையில் அவர்கள் பெற்ற புள்ளிகள் மற்றும் அவர்கள் விண்ணப்பித்த பாடங்கள் அடிப்படையில் 1100 பேர் அளவான பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது.
அடுத்து இரண்டாம் கட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு நாளை 03-03-2018 சனிக்கிழமை அண்ணளவாக 300 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. இந்த நியமனம் பெறும் பட்டதாரிகளில் பெருபான்மையான நபர்கள் இரண்டு பாடங்களிலும் 40 க்கு 40 குறைவான புள்ளிகளை பெற்ற பட்டதாரிகளாவர்கள். ஆனால் மொத்த புள்ளிகள் 100க்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்ற பட்டதாரிகள் இருக்கும் நிலையில் சித்திடையாத பட்டதாரிகளுக்கு ஆளுநரால் சனிக்கிழமை நியமனம் வழங்கப்படவுள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜனாதிபதியினால் உடன் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என அறிவித்து அதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதியை அழைத்து வந்து சித்தியடையாத பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.
அஜ்மல் - ஏறாவூர்
No comments:
Post a Comment