சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை தமிழ் மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை தமிழ் மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்க நடவடிக்கை

கல்முனை பெரிய நீலாவணை பிரதேசத்தில் 28ஆம்திகதி இரவு சூறாவளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் பாதிக்கப்பட்ட கல்முனை பெரிய நீலாவணை பிரதேசத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலாளர் லவநாதன் உள்ளிட்ட குழவினர்  01ஆம்திகதி பார்வையிட்டனர்.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் பாதிக்கப்பட்ட வீடுகளையும் மக்களையும் பார்வையிட்டதுடன் மக்களின் உடன் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களையும் பாதிக்கப்பட்ட வீடுகளையும் உடன் திருத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு பிரதி அமைச்சர் ஹரீஸ் தொலைபேசியில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர் ஆகியோரை தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கமைவாக உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

No comments:

Post a Comment