சீனா முதல் ஸ்பெயின் வரை வசிக்கும் மூன்று பில்லியன் மக்களின் தேவைகளுக்கான பொருட்களையும், சேவைகளையும் வழங்கக்கூடிய இந்து சமுத்திரத்தின் பொருளாதார நிதி கேந்திர நிலையமாக இலங்கை காணப்படுகிறது.
2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாடு இன்று சிங்கப்பூர் போ-சீசன்ஸ் ஹோட்டலில் ஆரம்பமானது. இந்த மகாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் ஏற்பாடு செய்திருந்த இந்த மகாநாட்டில் வலுவானதும், நிலைபேறானதும், ஆக்கபூர்வமுமான பொருளாதாரத்தின் ஊடாக இலங்கையில் வியாபாரத்திற்கான கவர்ச்சி மிக்க கேந்திர நிலையமாக மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன் நன்மைகளை பெற்றுக் கொள்ள சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இலங்கை அடைந்து வருவதாக பிரதமர் கூறினார்.
No comments:
Post a Comment