25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாத கட்சிகளின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் சேர்க்கப்பட மாட்டாது என்று மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. 15 உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பான நெருக்கடிகள் காணப்படுகின்றன.
ஊழல் நிறைந்த விருப்பு வாக்கு முறைமையை ஒழித்து கிராமத்திற்கு பொறுப்புக் கூறும் மக்கள் பிரதிநிதியை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசல் முஸ்தபா மேலும் கூறினார்.
No comments:
Post a Comment