இலங்கையின் மின்வலு உற்பத்தி தொகுதிக்கு புதுப்பிக்கக்கூடிய மின்வலு தோற்றுவாய்களைக் கூடுதலாக அறிமுகப்படுத்தப் போவதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டளவில் 600 மெகாவொட் மின்வலுவை உற்பத்தி செய்யக்கூடிய காற்று மின்வலு உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் கீழ் மன்னாரில் 375 மெகாவோட் மின்வலு உற்பத்தி நிலையம் நிறுவப்படவுள்ளது. பூநகரியில் 170 மெகாவோட் மின்வலுவை உற்பத்தி செய்யக்கூடிய காற்று மின்வலு பூங்கா நிர்மாணிக்கப்படவுள்ளது.
சுன்னாகத்தில் 10 மெகாவொட் மின்வலுவை உற்பத்தி செய்யக்கூடிய இரு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment