ஒரு தொகை கஞ்சா பக்கட்களுடன் 8 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

ஒரு தொகை கஞ்சா பக்கட்களுடன் 8 பேர் கைது

சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 8 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் இருந்தவர்களையும் நேற்று மாலை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

நாட்டில் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தொடக்கம் ஹட்டன் மல்லியப்பு வரையிலான பகுதிகளிலும், தியகல பகுதிகளிலும் நேற்று மாலை பல வாகனங்களை தீடிரென ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.

இதன்போது, வெவ்வேறு வாகனங்களில் பயணித்த 8 பேரிடமிருந்து கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, குறித்த 8 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment