உள்நாட்டு போர் நடைபெற்றுவரும் சிரியாவில் உதவிப் பொருட்களுக்காக பெண்கள் உடலுறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் நடைபெற்றுவரும் சிரியாவில் பாதிக்கப்பட்ட பெண்கள் உடலுறவு வைத்தால்தான் மருத்துவம், சாப்பாடு உள்ளிட்ட உதவிகள் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் 700 பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த போரில் குழந்தைகள்தான் அதிகம் இறந்துள்ளனர். இந்த நேரத்தில் ஐ.நா.வால் அனுப்பி வைக்கப்பட்ட உதவி குழு அங்கு இருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகிறது. இதில் ஐநா உதவி குழுவை சேர்ந்த ஆண்கள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடலுறவு வைத்து கொண்டால் மட்டுமே மருத்துவம், சாப்பாடு உள்ளிட்ட உதவி பொருட்களை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிரிய பெண்கள் எவரும் உதவி பெற வருவதில்லை.
மேலும் அங்கிருக்கும் பெண்களிடம் உதவிகுழுவை சேர்ந்த ஆண்கள், எங்களை திருமணம் செய்து கொண்டால் உங்கள் குடும்பத்தை காப்பற்றுவதாக கூறி அவர்களை திருமணம் செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஐ.நா. அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment