இலங்கையை வறுக்கும் இனவாதம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

இலங்கையை வறுக்கும் இனவாதம்

இந்­நாட்டின் அனைத்து சமூ­கங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நல்­லெண்ணம் கொண்ட சகல மக்­களும் சக­வாழ்­வுடன் நிம்­ம­தி­யாக வாழ வேண்­டு­மென்றே விரும்­பு­கின்­றனர். ஆனால், இன­வா­த­மும் மத­வா­தமும் இம்­மக்­களின் சமா­தான, சக­வாழ்­வுக்குத் தொடர்ச்சியாக சவால் விடுத்­துக்­கொண்­டி­ருப்­பதை வர­லாற்று நெடுகிலும் அவ­தா­னிக்க முடி­கி­றது. 

அண்­மைக்­கா­ல­மாக சிறு­பான்மை சமூ­க­மான முஸ்­லிம்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளு­வதை இலக்­காகக் கொண்டு செயற்­படும் கடும்­போக்­கா­ளர்கள் முஸ்­லிம்­களின் மத, கலை, கலா­சார, பண்பாட்டு நட­வ­டிக்­கைகள் உட்­பட பல்­வேறு விட­யங்­களில் போலியான குற்­றச்­சாட்­டுக்­களை தாக்­கு­தல்­களை மேற்­கொ­ணடு வரு­வதைக் காணலாம்.

இந்­நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்­னரும், பின்­ன­ரு­மான காலங்களில் பெரும்­பான்மை பௌத்த சிங்­கள மக்கள் மத்தியிலுள்ள கடும்­போக்­கா­ளர்கள் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதிராக மேற்­கொண்ட இன­வாதச் செயற்­பா­டுகள் தீராத இனப்பிரச்சி­னை­யையும், முப்­பது வருட கால கொடூர யுத்தத்தையும், பேர­ழி­வு­க­ளையும் விளை­வு­க­ளாக கொடுத்­தது.

அதன் வடுக்­களும், வேத­னை­களும், மறை­யாத, மற­வாத நிலையில், அவற்றின் அழி­வு­க­ளுக்கும், இழப்­புக்­க­ளுக்கும் முற்­று­மு­ழு­தாக நிவா­ரணம் வழங்­கப்­ப­டாத சூழலில், பாதிக்­கப்­பட்ட மக்கள் பாதிப்புக்­க­ளுக்கு நிவா­ர­ணமும் நிரந்­தரத் தீர்வும் வேண்டி வடக்கிலும், கிழக்­கிலும், தெற்­கிலும் கூட பல்­வேறு கோணங்­களில் போராட்­டங்­களை நடத்தி வரு­வ­துடன், அவற்­றி­னூ­டாக பல வேண்டுகோள்­க­ளையும், கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்து சர்வதே­சத்­தி­னதும், அர­சி­னதும் கவ­னத்தை ஈர்க்கச் செய்து வருகின்றனர். 

சர்­வ­தே­சத்தின் இறுக்­க­மான பிடிக்குள் இலங்கை தள்­ளப்­ப­டு­வ­தற்கு இன­வாதத்தின் பரம்பல் ஏற்­ப­டுத்திய காயங்­கள்தான் என்­பதை மறுக்க முடி­யாது. சர்­வ­தேசம் பல்­வேறு பிரே­ர­ணை­களை முன்வைத்து அவற்றை நிறை­வேற்­றுங்கள் இல்­லைேயல் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கி நகர வேண்டி வரும் என இலங்­கைக்கு எச்­ச­ரிக்கை விடும் அள­வுக்கு மோச­மான நிலை­மையை ஏற்படுத்திய­வர்கள் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள கடும்போக்கு மத­வா­தி­களும் இன­வா­தி­களும் என்­பதை மறு­த­லிக்க இய­லாது.

இச்­சு­தந்­தி­ரத்­தே­சத்தில் வாழும் அனைத்து இன மக்­களும் சுதந்திரமாக வாழ முடியும் என்றும், அவர்­க­ளுக்­கான உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­த­லா­காது என்றும் உரிமைச் சாச­னங்­களும், நிபந்தனை­களும், நிய­தி­களும் சர்­வ­தேச ரீதி­யா­கவும், தேசிய ரீதியாகவும் வகுக்­கப்­பட்­டி­ருந்­தும் இந்­நாட்டின் பெரும்­பான்மை சமூக­மான பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள கடும்­போக்கு மத­வா­தி­களும், இன­வா­தி­களும் மத­வா­தத்­திற்கும், இனவாதத்திற்கும் முன்­னு­ரிமை வழங்கி சர்­வ­தேச யாப்புக்களையும், தேசிய அர­சியல் சாச­னங்­க­ளையும் அச்சாசனங்க­ளினால் உரு­வாக்­க­ப்பட்­டுள்ள சட்­டங்­க­ளையும் சவால்களுக்கு உட்­ப­டுத்தி, அச்­சட்­டங்­களை ஒதுக்கி வைத்­து­விட்டு, அவற்றை ஒரு பொருட்­டாக எடுத்­துக்­கொள்­ளாது பெரும்பான்மையினர் என்ற ம­மதையில் சிறு­பான்மை சமூ­கத்­திற்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தா­னது சமூ­கங்­களின் சக­வாழ்­வுக்கு மாத்திரமல்ல இந்­நாட்டின் சட்­டத்­திற்கும், நிர்­வாகச் செயற்பாடுகளுக்கும் எதிர்­கால அபி­வி­ருத்­திக்கும் பெரும் அச்சுறுத்த­லாக அமைந்து விடு­வ­தோடு இந்­நல்­லாட்சி அரசாங்கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்குத் தடை­யா­கவும் சவா­லா­க­வு­முள்­ள­துடன் இலங்­கையை சர்­வ­தே­சத்­திடமும் இறுக்கியுள்­ளது.

குறிப்­பாக கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை முஸ்லிம்களை முதன்­மைப்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற தாக்குதல் சம்­ப­வங்கள் முஸ்­லிம்கள் வாழப் பாது­காப்பு அற்ற நாடுகள் வரி­சையில் இலங்­கை­யையும் உட்­ப­டுத்­து­வ­தற்கு காரணமா­யிற்று. இன­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள் சர்­வ­தேச நிறுவனங்கள் இலங்கை குறித்து அறிக்­கை­வி­டு­வ­தற்கும், சர்வதேசத்தின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கச் செய்­வ­தற்கும் உந்துசக்­தி­யாக அமைந்­து­விட்­டன.

சர்­வ­தே­சத்தின் இறுக்­கத்­திற்குள் இலங்கை
இலங்­கை­யா­னது, சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் மற்றும் சர்­வ­தேச மனித உரிமைச் சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாகக் கூறப்­படும் விட­யத்தில் நம்­ப­க­ர­மான பொறுப்புக் கூறல் பொறி­மு­றையை முன்னெடுக்காவிடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கி பய­ணிக்­கும் என்ற ஐ.நா. மனித உரி­மைகள் ஆணையாளரின் எச்­ச­ரிக்­கைக்கு முகம்­கொ­டுத்­துள்ள நிலையில், இந்­நாட்டின் மீது சர்­வ­தேசம் வைத்­துள்ள கறுப்­புப்­புள்­ளியை நீக்குவதற்­காக இவ்­வ­ரசு முயற்­சித்து வரும் வேளையில், பௌத்த சிங்கள கடும்­போக்­கா­ளர்கள் மேற்­கொண்டு வரு­கின்ற நடவடிக்கைகள் எவ்­வி­தத்­திலும் இக்­க­றுப்­புப்­புள்­ளியை அகற்ற வழிகோ­லாத நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நாட்டின் மீது ­பற்­றுள்­ள­வர்கள் இந்­நாடு பல்­து­றை­யிலும் முன்­னேற வேண்டும், சர்­வ­தே­சத்தில் நற்­பெ­யரைப் பெற வேண்­டு­மென்றே சிந்திப்பர். ஆனால், இங்­குள்ள பௌத்த சிங்­கள பேரி­ன­வாத சக்திகள் நாட்டின் மீது பற்­றுள்­ள­வர்­க­ளாக சிங்­கள மக்கள் மத்­தியில் அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்டு, சர்­வ­தே­சத்தின் பிடிக்குள் தள்ளப்பட்­டுள்ள இலங்­கையின் நிலைமை குறித்து எவ்­வித அக்கறையும் கொள்­ளாது, தங்­களை இயக்­கு­கின்ற சக்­தி­களின் இலக்­கு­களை வெற்­றி­கொள்ளச் செய்­வ­தற்­காகச் செயற்பட்டுக்கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கி­றது. 

கடந்த வருடம் கொழும்பில் தங்­கி­யி­ருந்த ரோஹிங்­கியா முஸ்லிம் அக­திகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்குதல் மற்றும் சென்ற நவம்பர் மாதம் கிந்­தோட்­டையில் முஸ்­லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்­பட்ட வன்­மு­றைகள் என்­ப­வற்றை காரணங்களாகக் குறிப்­பிட்டு கடந்த 22ஆம் திகதி சர்­வ­தேச மன்னிப்புச் சபை­யினால் வெளியி­டப்­பட்­டுள்ள உலக நாடு­களின் மனித உரி­மைகள் நிலை­வரம் தொடர்பில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்­டு­க­ளுக்­கான அறிக்­கையில் முஸ்­லிம்கள் வாழ்­வ­தற்கு பாதுகாப்­பற்ற நாடாக இலங்­கையை பட்­டி­ய­லி­ட்­டி­ருப்­ப­தா­னது இலங்கை மீது சர்­வ­தேசம் வைத்­துள்ள கறுப்புப் புள்­ளி­யா­கவே கருத­வேண்­டி­யுள்­ளது. 

அத்­தோடு, கடந்த ஜன­வரி மாதம் சர்­வ­தேச மனித உரி­மைகள் கண்கா­ணிப்­பகம் வெளியிட்ட அறிக்­கையில், இலங்­கையில் வாழும் சிறு­பான்­மை­யினர் பாது­காப்­பின்­மையை உணர்­கின்­றனர். குறிப்பாக இலங்கை முஸ்­லிம்கள் அச்­சத்தில் உள்­ளனர் என அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதேபோல் கடந்த வருடம் யாழ்ப்­பாண முஸ்லிம் அமைப்­பினர் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவின் சிறு­பான்மை விவ­கா­ரங்­க­ளுக்­கான பிர­தி­நிதி றீட்டா ஐசக்கை சந்­தித்­த­வேளை, இலங்கை முஸ்லிம்களின் நிலை­கண்டு நான் அதிர்ச்­சி­ய­டைந்தேன் எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார். 

இவ்­வாறு சர்­வ­தேசம் கவலை கொள்ளும் அளவுக்கு பௌத்த சிங்கள பேரி­ன­வாதத்தால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் துவம்சம் செய்யப்பட்டுக்கொண்­டி­ருக்­கி­றார்கள் என்பது புலப்படுத்தப்படுகிறது. அத்­துடன், இலங்கை மீது வைக்கப்பட்­டுள்ள கறுப்­புப்­புள்­ளியை அகற்­று­வ­தற்குத் தடையாகவுள்­ளது என்­பதைச் சுட்­டிக்­காட்ட வேண்டும். 

சிறுபான்மை சமூ­கங்­களை உணர்வு ரீதியா­க­வும் செயற்­பாட்டு வடிவிலும் அச்­சு­றுத்­து­வ­தற்­காக வெவ்வேறு பெயர்­களில் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் உருவாக்­கப்­பட்­டி­ருக்கும் அமைப்புக்களும் அவர்­க­ளோடு இணைந்து செயற்­படும் கடும்போக்­கா­ளர்­களும், இன­வா­திகளும் வெவ்­வேறு போலிக்காரணங்­களைக் கூறி முஸ்­லிம்கள் மீது மேற்கொண்டு வருகின்ற தாக்­குதல் சம்­ப­வங்­களின் வரி­சையில் அம்­பாறை நகரிலுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடை­கள், வாகனங்கள் உட்­பட பள்­ளி­வா­சலும் தாக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­னது சர்வதே­சத்தின் இலங்கை மீதான பார்­வையை மேலும் வலுப்படுத்து­மென அர­சியல் ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். 

இந்­நி­லையில், அம்­பாறை நகரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்கொள்­ளப்­பட்­டுள்ள தாக்குதல்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்­குழு உட­ன­டி­யாக அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இன­வா­தத்தின் கழுகுப் பார்­வைக்குள் அம்­பாறை 
அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் செறி­வாக வாழ்­வதும் பேரினவா­தத்­திற்கு பெரும் தலை­யி­டிதான். இன­வா­தத்தின் கழுகுப்பார்­வை­யினால் அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்­களின் செறிவானது தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­ப­டு­வதன் ஓர் அடையாளமா­கவும் செறி­வுக்­கு­றைப்­புக்­கான நட­வ­டிக்­கை­களில் ஒன்­றா­கவும் பௌத்த அடை­யா­ளங்கள் இம்­மா­வட்ட முஸ்லிம் பிரதே­சங்­களில் காணப்­ப­டு­வதாகக் கூறப்­ப­டு­வதைச் சுட்டிக்காட்டலாம். 

பேரி­ன­வா­தத்தின் கண்­க­ளுக்குள் அம்­பாறை மாவட்ட முஸ்லிம்களின் வளர்ச்சி தொடர்ச்சியாக குத்திக்கொண்டிருப்பதை இதன் மூலம் கண்டுகொள்­ளலாம். அம்­பாறை மாவட்­டத்தில் 340 தொல்­பொருள் அமை­வி­டங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும், அவற்றை பாது­காப்பு படை­களைக் கொண்டு பாது­காப்­ப­தற்­கான நடவடிக்கைகள் எடுக்­கப்­படும் எனவும் கடந்த வரு­டத்தில் அறிவிக்கப்­பட்­ட­மையும் அம்­பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. 

அத்­தோடு, அம்­பா­றையின் இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணியை நீதிக்­குப்­பு­றம்­பாக அப­க­ரிக்­கவும் அதில் விகா­ரையைக் கட்­டவும் முயற்­சித்­துக்­கொண்­டி­ருப்­பதும் இந்நடவடிக்­கை­க­ளுக்கு அர­சியல் பின்­னணி வகிப்­பதும் இம்மாவட்ட முஸ்­லிம்­களை நெருக்க­டிக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது. 

கடந்த காலங்­களில் திட்­ட­மி­டப்­பட்ட அர­சியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்ட குடி­யேற்­றங்­களின் ஊடாக இம்­மா­வட்­டத்தில் பௌத்த சிங்கள மக்­களின் சனத்­தொகை அதி­க­ரிக்­கப்­பட்­டது என்பது வர­லாறு கூறும் நிதர்­ச­ன­மாகும். இந்த வர­லாற்றை மீண்டும் புதுப்­பிப்ப­தற்கு புதிய கோணத்தில் கடும்­போக்கு பௌத்த துறவிகளை முன்­னி­றுத்தி இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தையும் அதை­யண்­டிய பிர­தே­சங்­க­ளையும் காவுகொள்ள முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் குறிப்பிடப்படுகி­றது.

இம்­மு­யற்­சி­யா­னது இம்­மா­வட்­டத்தில் வாழும் தமிழ், முஸ்­லிம்கள் மத்­தியில் சந்­தே­கத்தையும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதை வெறு­மேன தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. ஏனெனில் தீக­வாபி புனித பூமி என்ற பெயரில் முஸ்­லிம்­களின் பல ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்­ளமை இச்­சந்­தே­கத்­திற்கும் அச்­சத்­திற்கும் காரண­மாக அமை­கி­றது.

இக்­கா­ர­ணத்தின் அடிப்­ப­டை­யில்தான் மாணிக்­க­மடு மாயக்கல்லிமலையில் இன­வாதம் மோகம்­கொண்டு அத­னூ­டாக தங்­க­ளது நிகழ்ச்சி நிரல்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அம்­பாறை வாழ் முஸ்­லிம்கள் தங்க­ளது எதிர்ப்பைக் காட்­டிக்­கொண்டு வருகிறார்களே தவிர, பௌத்த மக்­களின் வணக்க வழி­பாட்­டுக்கு இடைஞ்சல் ஏற்­ப­டுத்­த­வல்ல என்ற யதார்த்­தத்தை உணரும் பௌத்த சிங்­கள மக்கள் அறி­வார்கள். இந்­நி­லையில் அம்­பாறை மாவட்டத்தின் வர­லாற்றுப் பின்­னணி குறித்தும் அறிய வேண்­டிய தேவை­யுள்­ளது.

1960ஆம் ஆண்­டுக்கு முன்னர் அம்­பா­றை­யா­னது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துடன் இணைந்­தி­ருந்­தது. மட்­டக்­க­ளப்பு மாவட்டம் மிக நீண்ட கால­மாக புனாணை முதல் குமணை வரை தமிழ் மற்றும் முஸ்­லிம்­களை கொண்ட பிர­தே­ச­மாகக் காணப்­பட்­டது. மட்டக்களப்பு மாவட்டம் அதிக பரப்பை கொண்டு காணப்பட்டதாலும், போக்­கு­வ­ரத்து செய்­வதில் மக்கள் சிர­மத்தை நோக்­கி­ய­தாலும், அத்­தோடு நிர்­வாகச் சிக்கல் காணப்­பட்­ட­தாலும் அவற்றை நிவர்த்தி செய்­யு­மு­க­மாக கல்­மு­னையில் உதவி அர­சாங்க அதிபர் அலு­வ­லகம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு 1940ஆம் ஆண்டு முதல் இவ்வலு­வ­லகம் செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்­ததை வர­லாற்றில் அவதானிக்க முடி­கி­றது. 

இந்­நி­லையில், மட்­டக்­க­ளப்­புக்குத் தென்­கி­ழக்கே காட்­டுப்­புறச் சூழலைக் கொண்ட பிர­தே­ச­மாகக் காணப்­பட்ட தற்­போது அம்பாறை என அழைக்­கப்­படும் இப்­பி­ர­தே­சத்­தையும் சேர்த்து மட்டக்­க­ளப்பு மாவட்­டத்­துடன் இணைந்­தி­ருந்த கல்­முனை, சம்மாந்துறை, அக்­க­ரைப்­பற்று, பொத்­துவில், பாணமை, உகன, தமண ஆகிய பிர­தே­சங்கள் பிரித்­தெ­டுக்­கப்­பட்டு 1961ஆம் ஆண்டு அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. இம்­மா­வட்­டத்தின் தலைந­க­ராக அம்­பாறை தேர்ந்தெடுக்­கப்­பட்­டது. 

ஆனால், உண்­மையில் இவ்­வாறு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லி­ருந்து பிரித்­தெ­டுக்­கப்­பட்ட இப்­பி­ர­தே­சங்­களை உள்­ள­டக்­கிய மாவட்டத்திற்கு அம்­பாறை தவிர்ந்த கல்­முனை போன்ற ஏனைய பிர­தே­சங்­களின் பெயர்­களில் ஒன்றை வைத்­தி­ருக்க வேண்டும். அப்பெ­ய­ரி­லேயே இம்­மா­வட்டத் தலை­ந­கரின் பெயரும் அமைந்திருக்க வேண்­டு­மென வர­லாற்று ஆசி­ரி­யர்கள் சுட்டிக்காட்டு­கி­றார்கள். ஏனெனில், இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட இம்மா­வட்­டத்தின் தலை­ந­க­ராகக் தேர்ந்தெடுக்­கப்­பட்ட அம்பாறையில் வாழ்ந்த பௌத்த சிங்­கள மக்­களின் சனத்தொகையை விடவும் ஏனைய பிர­தே­சங்­களில் வாழ்ந்த தமிழ் முஸ்­லிம்­களின் சனத்­தொகை அதி­க­மாகும். 

புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் 1963ஆம் ஆண்டு 61,996 ஆகக் காணப்பட்ட சிங்­கள மக்­களின் சனத்­தொ­கை­யா­னது 1981ஆம் ஆண்டு 146,943 ஆகவும் 2001ஆம் ஆண்டில் 236,583ஆகவும் அதி­க­ரித்­தது அல்­லது அதி­க­ரிக்­கப்­பட்­டது. திட்­ட­மிட்ட குடி­யேற்­றமே இந்த எண்ணிக்கை அதி­க­ரிப்­புக்குக் கார­ண­மாகும். இதற்கு உதாரணமாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துடன் இணைந்­தி­ருந்த மகாஓயா, பதி­யத்­த­லாவை, தெஹி­யத்­த­கண்­டிய, கிராந்துருக்கோட்டை போன்ற சிங்­கள மக்கள் அதி­க­ளவில் வாழ்ந்த குடி­யேற்றக் கிராமப் பிர­தே­சங்கள் அம்­பாறை மாவட்­டத்­துடன் இணைக்­கப்­பட்­டதன் ஊடாக முஸ்­லிம்கள் அதி­கப்­ப­டி­யாக வாழும் மாவட்டம் என்ற நிலை மாற்­றப்­பட்­டது. 

இதன் பின்­ன­ணியில் திட்­ட­மிட்ட அர­சியல் நிகழ்ச்சி நிரல் செயற்பட்டது என்­பது நிதர் ­ச­ன­மாகும்.
அம்­பாறை மாவட்­டத்தின் அம்­பாறை தவிர்ந்த பொத்­துவில், கல்முனை மற்றும் சம்­மாந்­துறைப் பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­களின் சனத்­தொகை அதி­க­மாகக் காணப்­பட்­டது. சனத்­தொகைக் கணிப்பீடு­களின் பிர­காரம், 1963ஆம் ஆண்டு அம்­பாறை மாவட்டத்தில் முஸ்­லிம்­களின் எண்­ணிக்­கை­யா­னது 97,621ஆகவும் தமி­ழர்­களின் எண்­ணிக்கை 50,497 ஆகவும் காணப்­பட்­டது. 1981ல் முஸ்லிம்கள் 161,568ஆகவும் 2001ல் 264,620ஆகவும் காணப்­பட்­டனர். தமிழர்­களின் எண்­ணிக்கை 1981ல் 79,257ஆகவும், 2001ல் 109,903ஆகவும் காணப்­பட்­டமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

இவ்­வா­றான நிலையில் 2012ஆம் ஆண்டின் சனத்­தொகைக் கணக்கெ­டுப்பின் பிர­காரம், 4,415 சதுர கிலோ­ மீற்றர் பரப்பளவையும், 20 பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளையும், 503 கிராம சேவகர் பிரி­வு­க­ளையும் கொண்ட அம்­பாறை மாவட்­டத்தில் 648,057 பேர் வாழ்­கின்­றனர். இத்­தொ­கையில் சிங்­க­ளவர் 251,018 பேரும், 282,484 முஸ்­லிம்­களும், 112,750 தமி­ழர்­களும் அடங்­குவர் என்­ப­தோடு மக்கள் தொகையில் முஸ்­லிம்கள் அதி­கப்­ப­டி­யாக இம்­மா­வட்­டத்தில் வாழ்வ­தா­னது அல்­லது அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்­களின் அதி­க­ரிப்­பா­னது இன­வா­தி­க­ளி­னதும் அவர்­களை திரை­ம­றைவில் இயக்கும் அர­சியல் சக்­தி­க­ளி­னதும் காழ்ப்­பு­ணர்ச்­சியை அதிகரிக்கச் செய்­தி­ருக்­கி­றது. 

இம்­மா­வட்­டத்­தி­லுள்ள சிங்­கள மக்­களின் இன­வி­ருத்­தியை தடுப்பதற்­காக முஸ்­லிம்கள் செயற்­பட்­டி­ருந்தால் சிங்­கள மக்­களின் சனத்­தொகை எவ்­வாறு அதி­க­ரித்­தது என்ற கேள்­வியும் எழு­கி­றது. அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்கள் மீதான போலி­யான குற்றச்சாட்டுக்­கான பின்­னணி இம்­மா­வட்ட முஸ்­லிம்­களின் வளர்ச்சி தொடர்பில் இன­வாதம் கொண்டுள்ள காழ்ப்­பு­ணர்ச்சி என்பதே உண்­மை­யாகும். இக்­காழ்ப்­பு­ணர்ச்­சியின் வெளிப்­பாட்டின் அங்க­மா­கவே அம்­பாறை தவிர்ந்த ஏனைய பிர­தே­சங்­க­ளி­லுள்ள அரச நிறு­வ­னங்­களின் தலைமைக் காரி­யா­ல­யங்­களை அம்­பாறை நக­ருக்கு நகர்த்­து­வ­தற்­கான முயற்­சிகள் அர­சியல் சக்­தி­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றதை அவ­தா­னிக்க முடியும். 

இருப்­பினும், கடந்த காலங்­களில் இன­வா­தி­க­ளுக்கும், மதவாதிகளுக்கும் இவர்­களை இயக்கும் அர­சியல் சக்­தி­க­ளுக்கும் ஊட்டச் சக்­தி­யாகத் செயற்­படும் ஒரு சில சிங்­கள ஊட­கங்கள் இந்த இன­வாதச் செயற்­பாட்­டுக்கு எதி­ராகச் செயற்­ப­டு­வோரை அடிப்படை­வா­திகள் என்றும் பௌத்த விகாரை அமைப்­ப­தற்கு இவர்கள் தடை­யாகச் செயற்­ப­டு­கி­றார்கள் என்றும் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­புரை வழங்கி வந்த அதே கோணத்­தில்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முஸ்லிம் நப­ருக்குச் சொந்­த­மான ஹோட்­டலில் நடந்த போலிக்­குற்­றச்­சாட்டுச் சம்­ப­வத்தை திசை திருப்பியிருக்கிறது.

அம்­பாறை நக­ரி­லுள்ள முஸ்லிம் நப­ருக்குச் சொந்­த­மான ஹோட்டலில் தயா­ரிக்­கப்­பட்ட உணவில் இன­வி­ருத்­தி­யை­த் தடுக்கும் மாத்­திரை கலக்­கப்­பட்­ட­தாகக் கூறி அந்­ந­க­ரி­லுள்ள பள்ளிவா­ச­லையும், முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடை­க­ளையும், வாகனங்­க­ளையும் அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்­திய அநியா­யத்­திற்கு முஸ்­லிம்கள் நீதி­ கோ­ரி­யி­ருக்கும் நிலையில் சிங்கள ஊட­கங்கள் முழுப் பூச­ணிக்­கா­யையும் சோற்­றுக்குள் மறைக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களால் அம்பாறை சிங்­கள மக்­களின் இன­வி­ருத்தி அழிக்­கப்­ப­டு­வ­தாக சித்த­ரித்து சிங்கள் மக்கள் மத்­தியில் பரப்ப முயற்சி செய்­துள்­ளமை இவ்­வூ­டகங்கள் ஊடக தர்­மத்­துக்­கப்பால் போலிக்­குற்­றச்­சாட்டை பரப்­பு­வ­தற்கு துணை ­போ­யி­ருப்­ப­தாகக் குற்றஞ்சாட்டப்படுவதையும் குறிப்­பிட்­டாக வேண்டும். 

கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டு­களும் எதி­ரொ­லியும்
கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மாண­வர்கள் அணியும் பர்தாவுக்கு பெரும் அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்­தி­யமை, பள்­ளி­வா­சல்கள் இயங்­கு­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டமை, ஹலால் உணவு உண்ணும் உரி­மையை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யமை, வர்த்­தக நடவடிக்­கை­க­ளுக்கு தடை விதித்­தமை, முஸ்­லிம்­களை அடிப்படைவா­திகள், மத­வா­திகள், தீவி­ர­வா­திகள், பயங்­க­ர­வா­திகள் என்ற பட்­டத்­திற்­குள்­ளாக்கி உள ரீதி­யாக உணர்­வு­களைப் பாதித்தமை போன்ற 400க்கும் மேற்­பட்ட தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் கடுப்­போக்கு இன­வாத அமைப்­புக்­க­ளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்­ந­ட­வ­டிக்­கை­களை கண்டும் காணாத­து­போன்று செயற்­பட்ட கடந்த ஆட்­சியின் மீது சிறு­பான்மை மக்கள் அதிலும் முஸ்­லிம்­களில் 90 வீத­மானோர் அவ்­வாட்­சியின் மீது நம்­பிக்கையிழந்­தனர். அந்த நம்­பிக்கை இழப்பை 2015 ஜனா­தி­பதித் தேர்தலிலும் பாரா­ளு­மன்றத் தேர்தலிலும் தமது வாக்­கு­க­ளினால் வெளிப்­ப­டுத்­தினர். ஆட்சி மாற்றத்­தையும் கண்­டனர். 

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்­ளதே தவிர கடும்போக்காளர்களின் செயற்­பா­டு­களில் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை. கடும்­போக்­கா­ளர்­க­ளி­னதும் இன­வா­தி­க­ளி­னதும் செயற்­பா­டுகள் மாற்றம் பெறாது தொடர்ந்து நடந்து கொண்­டுதான் இருக்­கி­றது. கடந்த வருடம் காலிக்­கோட்டை தர்­ஹாவின் சுற்­று­மதில் உடைக்கப்பட்­டமை, மாத்­த­றையில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் குண்­டு­த்தாக்­கு­த­லுக்குட்­பட்­டமை, சித்­தி­ரைப்­புத்­தாண்டு காலத்தில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களில் பொருட்­களை கொள்வ­னவு செய்ய வேண்டாம் என சிங்­கள மக்கள் மத்­தியில் துண்டுப் பிர­சு­ரங்கள் விநி­யோ­கித்­தமை போன்ற நிகழ்­வு­களை அவதா­னிக்­கின்­ற­போது, கடந்த ஆட்­சியில் கடும்­போக்கு மதவாதிகளி­னாலும், இன­வா­தி­க­ளி­னாலும் பதி­யப்­பட்ட அழிக்கப்படாத கறுப்புப் பக்­கங்கள் இந்த நல்­லாட்­சி­யிலும் தொடர்ச்­சி­யாக அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. 

கடந்த ஆட்­சியில் அளுத்­க­மை­யிலும், இந்­நல்­லாட்­சியில் கடந்த வருடத்தில் கிந்­தோட்­டை­யிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்கொள்­ளப்­பட்ட சொத்­த­ழி­வு­க­ளுக்­கான நிவா­ர­ணங்கள் முழுமை­யாக வழங்­கப்­ப­டாத நிலையில், மேலும் அம்­பாறை நகரிலும் முஸ்­லிம்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்க வேண்­டிய நிலைக்கு இந்­நல்­லாட்சி அர­சாங்கம் தள்­ளப்­பட்­டுள்­ளது.

மாற்­ற­ம­டை­யாத கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டுகள் இந்நாட்டில் வாழும் சகல இன மக்­க­ளு­டனும் எப்­போதும் நல்லிணக்கத்­து­டனும், சக­வாழ்­வு­டனும் ஏனைய இனத்­தி­ன­ரது உரிமை­க­ளுக்கும் அவர்­களின் மத கலை, கலா­சார விடயங்களுக்கும் மதிப்­ப­ளித்­தும் கௌர­வப்­ப­டுத்­தியும் வாழ வேண்டும் என எண்ணும் முஸ்­லிம்­களின் உள்­ளங்­களை வெகு­வாகக் காயப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. நிம்­ம­திக்கு குந்­தகம் விளைவித்திருக்கிறது. பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் எதிரொலியையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இருந்தபோதிலும், கடும் ­போக்­கா­ளர்­களின் நட­வ­டிக்­கை­க­ளினால் முஸ்லிம் சமூகம் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்டும் இப்­பா­திப்­புக்கள் தொடர்பில் சிந்­திக்­காத, தானும் தனது அன்­றாட நட­வ­டிக்­கை­களும் என்­றெண்ணி வாழும் சமூக உணர்­வற்ற ஜென்­மங்கள் முஸ்லிம் சமூ­கத்­துக்குள் இருப்­பதை எண்ணி வேத­னைப்­பட வேண்­டி­யுள்­ளது. 

அத்­தோடு, கடும் ­போக்­கா­ளர்­களின் முஸ்லிம் எதிர்ப்பு தாக்­குதல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆளுக்­கொரு கோணத்தில் ஊடகங்­க­ளுக்கு அறிக்கை விடு­கி­றார்­களே தவிர, ஒன்­று­பட்டு நிரந்தரத் தீர்வைப் பெறு­வ­தற்­கான இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான நடவடிக்­கை­களை முன்­னெ­டுக்க முன்­வ­ரா­துள்­ளமை முஸ்லிம் அரசியல் பல­வீ­னத்­தையும், கட்சி அர­சி­யலில் கொண்­டுள்ள அரசியல் போதை­யையும் புலப்­ப­டுத்­து­வ­தா­கவே அமை­கி­றது.

ஜனா­தி­ப­தியின் நல்­லி­ணக்க முயற்­சியும் நம்­பிக்­கையும்
கடும்­போக்­கா­ளர்கள் தங்­களின் இருப்­புக்கும் மத, கலை, கலா­சார பண்­பாட்டு வியா­பார விட­யங்­க­ளுக்கும் ஆட்­சி­யா­ளர்­களின் அனுசர­ணை­யுடன் அச்­சு­றுத்­த­லாக இருப்­பார்கள். இந்­நாட்டில் நிம்மதி­யுடன் வாழ முடி­யாது. தங்­க­ளது பிரச்­சி­னைகள் தீர்க்கப்படாது என்ற காரணங்களினாலேயே 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். 

ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலினர். ஆனால், கடந்த ஆட்சியில் இருந்த அச்சுறுத்தல் இந்நல்லாட்சியிலும் தொடர்கதையாகத் தொடரப்படுவது சிறுபான்மை சமூகங்களின் மத்தியில் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு கேள்விக்கணைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சமாதான சகவாழ்வு பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் அதிகமாகப் பேசப்படும் இந்நல்லாட்சியில் அதற்கான அமைச்சும் உருவாக்கப்பட்டு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி நல்லிணக்கம் என்பது ஆன்மீகத் தத்துவம், ஆன்மீகப் பக்குவத்தை அடையாத சமூகத்தில் அதனை வெற்றிகொள்ளச் செய்வது சவால் நிறைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்ற கடும்போக்காளர்கள் ஆன்மீக ரீதியான பக்குவத்தை அடையவில்லை என்பதைப் புலப்படுத்துவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்நிலையில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும், சொத்துக்களும், பள்ளிவாசல்களும் தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதனால் பதியப்படும் கறுப்புப்பக்கங்கள் அதிகரிக்கப்படுகிறதே தவிர நிரந்தரத் தீர்வு கிடைத்ததாகத் தெரியவில்லை. 

அம்பாறை மாவட்ட மக்களினது நிம்மதியைக் கேள்விக்குட்படுத்தியுள்ள இந்நடவடிக்கைக்கு உரிய பரிகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பஸ் போன பின் கைகாட்டும் பாரம்பரிய அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால், இவ்விடயத்தில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் முறையான அழுத்தங்களைப் பிரயோகித்து உரிய தீர்வை பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், முஸ்லிம்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்துவதற்கும், இப்பிரதேசத்தில் வாழும் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாது சகவாழ்வு கட்டியெழுப்பப்படுவதற்கும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். 

இந்நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இப்பிரதேசம் சிறுபான்மை சமூகத்திடமிருந்து பறிபோகாமல் பாதுகாக்கப்படுவதற்கும், அச்சமின்றி வாழ்வதற்கும் வழிவகுக்கும் என்பதுடன் ஒரு இனத்தை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட நினைத்தால் நாட்டைக் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனக்கூறும் ஜனாதிபதியின் நல்லிணக்க நடவடிக்கையில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை சர்வதேசத்திடம் இறுகிக்கொள்ளாது தவிர்ந்து கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.

வீரகேசரி

No comments:

Post a Comment