தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு! - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, February 27, 2018

demo-image

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

5a2e30ee5ed56-IBCTAMIL
வவுனியா - குருமன்காடு, காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞரது தாயார் இன்று காலை 8 மணியளவில் வேலைக்கு சென்று மீண்டும் 12.30 மணியளவில் வீடு திரும்பிய சமயத்தில் மகன் தூக்கில் தொங்கியதைக் கண்டு சத்தம் போட்டு கத்தியுள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அயலவர்களின் உதவியோடு இளைஞரது சடலம் கிழே இறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் 28 வயதான கலைச்செல்வன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *