சவுதி அரேபியாவில் பெண்களும் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 27, 2018

சவுதி அரேபியாவில் பெண்களும் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி

சவுதி அரேபியாவில் பெண்களும் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பலகாலமாக காணப்பட்டு வந்துள்ளது. ஆனால் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் 2030ஆம் ஆண்டு தொலைநோக்கு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை ஒவ்வொன்றாக தடை செய்து வருகின்றார்.

இதனடிப்படையில் தற்போது பெண்கள் அனுமதி இல்லாமல் தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பு மற்றும் பெண்கள் வாகனம் ஓட்டும் அனுமதி என்பன வழங்கப்பட்டுள்ளது. அதே போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண்கள் சவுதி அரேபியா இராணுவத்திலும் சேர்ந்து பணியாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மட்டுமே நம்பிக்கை கொள்ளாமல், பொருளாதாரத்தை விரிவடைய செய்யும் சவுதி அரேபியா இளவரசனின் 2030ஆம் ஆண்டு தொலைநோக்கு திட்டங்கள் நிறைவேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment